கண்டியில் கோர விபத்து.!! மதிலை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த லொறி.!! ஒருவர் ஸ்தலத்தில் பலி.!!

கண்டி- கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, கண்டி பொலிஸ் நிலையத்தின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.குறித்த விபத்தில் லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.அத்துடன் சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், லொறியில் பயணித்த மற்றுமொருவர் காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.