இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் இன்று மாலை திடீர் மாற்றம்..!

UPDATE 02 – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1896 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 07 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.அந்தவகையில் அடையாளம் காணப்பட்ட புதிய நோயாளிகள் 07 பேரில் 06 பேர் மாலைதீவில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் ஒருவர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

UPDATE 01 – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளதாக  அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் இருந்து நாட்டுக்கு வந்ததன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட 6 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று மாத்திரம் 55 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதியான  1,895 பேரில் 542 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.