இலங்கை இராணுவ வரலாற்றில் நடந்த வித்தியாசமான பதவி உயர்வு..!! வரலாற்றை மாற்றியமைத்த ஜனாதிபதி கோட்டாபய..!!

இலங்கையில் 11வது இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மகன் W.A.S.சஞ்ஜய வனசிங்க மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இராணுவ வரலாற்றில் முன்னாள் இராணுவ தளபதியின் மகன் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது வரலாற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.தனது தந்தையான ஹெமில்டன் வனசிங்க இராணுவ தளபதியாக செயற்பட்ட காலப்பகுதியிலே, கெடட் அதிகாரி சஞ்ஜய வனசிங்க இராணுவத்தில் இணைந்துள்ளார்.