யாழில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.அடுத்த வாரமளவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசி மூலம் உரையாடி இதனை உறுதி செய்ததாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் 22ம் திகதி விவேகானந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட விவேகானந்தன் இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா நோயுடன் இலங்கை வந்த சுவிஸ் போதகரை தொழில் நிமித்தம் சந்திக்க சென்ற வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source : Tamil WIn