கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற கோர விபத்து…வெளியான மேலதிக தகவல்கள்..!!

வெள்ளவத்தை – பாமன்கடை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாமன்கடை ஈஸ்வரி வீதிக்கு அருகில் இரு கார்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், வேகன் ஆர் ரக காரில் பயணித்த பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரான சந்திரரத்ன மாப்பிட்டிகமவின் புதல்வியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.இந்தக் காரை ஓட்டிச் சென்ற பெண்ணின் கணவர் எனக் கூறப்படும் நபர் ஆபத்தான நிலைமையில் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மற்றைய காரை ஓட்டிச் சென்ற நபர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.