காதல் ஓகே ஆனதும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்! ஏன் இந்த ஆண்கள் மட்டும் இப்படி?

காசா பணமா ‘I love you’ சொல்லிவிட்டு போக இந்த ஆண்களுக்கு என்ன பிரச்சனையோ? எப்போதாவது லவ்யூ சொன்னால் தான் ஃபீலிங்ஸ் இருக்கும் என்பது ஆண்களது பார்வை. எப்போதும் லவ்யூ சொன்னால் தான் ஃபீலிங்ஸ் இருக்கும் என்பது பெண்களின் பார்வை. அதுவும் ஒருசில ஆண்களுக்கு அடிக்கடி லவ்யூ சொன்னால் நம்மை மொக்கையாக நினைத்துவிடுவாளோ என்ற எண்ணம் இருக்கும்.


இதனாலே சொல்ல தயங்குவார்கள். காதலிக்கும் ஆரம்பத்தில் வாயில் இருந்து வரும் பெரும்பாலான வார்த்தைகள் லவ்யூவாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் பெண்கள் அப்படியே எதிராக இருப்பார்கள். லவ்யூ எல்லாம் பண்டிகை தினம் போல எப்போதாவது தான் வரும். லவ் மட்டும் ஓகே ஆகட்டும், நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கும். காதல் துளிர்விடும் நேரத்தில் ஒரு நிமிடம் கூட விடாமல் விழுந்து விழுந்து மெசேஜ் செய்யவேண்டியது, பெண்கள் ஓகே சொன்னதும் அப்படியே அம்போனு விட்டுவிட்டு போக வேண்டியது.

பெரும்பாலான பெண்கள் காதலை அடிக்கடி சொல்லி காட்ட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். சொல்லிக்காட்டா விட்டால் காதல் எப்படி தெரியும்? அது கிடைக்காத பட்சத்தில் தான் சண்டை, வேறு உறவை நாடுவது வரை செல்கிறது. ரொமாண்டிக்காக இருக்க தெரியலையா அடிக்கடி லவ்யூ சொல்லுங்கள். நீங்க தான் மனைவிக்கு பெரிய ரொமாண்டிக் ஹீரோ.

அடிக்கடி லவ்யூ, சின்ன ஸ்மைல், கடவுளே வந்து உங்க கணவர் தவறானவர் என சொன்னாலும் நம்ப மாட்டார்கள். சொல்வதை கொஞ்சம் ஃபீலிங்ஸ் உடன் சொல்லுங்கள், இந்த உலகத்திலே நீங்க தான் பெஸ்ட் ஜோடி. மனைவியிடம் கர்வம் பார்க்காமல், போன் கட் செய்யும் போது, வெளியே செல்லும் முன் அடிக்கடி லவ்யூ சொல்லுங்கள்.

மறுபடியும் சொல்றேன். காசா பணமா அடிக்கடி ‘I love you’ சொல்லி பாருங்க. வாழ்க்கை எப்படி மாறும்னு பிறகு தெரியும். நீங்க எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஏன் போனை அட்டன் செய்யல, என்னோட மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணல என்ற வீண்வாதமே எழாது. அடடா! கணவர் பிசியாக இருந்தாலும், நமக்கு லவ்யூ சொல்றாரே! இப்படி ஒரு கணவரா என உருகத்தான் செய்வார்கள். நீங்கள் பிசி என்பதை விளக்காமலே புரிந்தும் கொள்வார்கள்.