கோதுமை மாவில் வெங்காய சமோசா சுலபமாகச் செய்வது எப்படி.?

சமோசா என்பது வெறும் தெருவோர சிற்றுண்டி மட்டுமல்ல அது ஒரு வரலாற்று கைத்திறன்.இதன் தனித்துவம் என்னவென்றால் உலகம் ஒட்டுக்கும் இதன் செய்முறை என்பது பொதுவானது.சமோசா என்பது தற்போதைய காலகட்டத்தில் இந்தியர்களின் பண்டமாக கருதப்படலாம், ஆனால் இதன் வரலாறு மிகவும் சிக்கலானதும் பரந்துபட்டதுமாகும்.

ஒவ்வொரு முறை சமோசாவை சுவைக்கும்போதும் இந்திய வரலாற்றையே சுவைப்பதாகவே கொள்ள வேண்டும்.சமோசாவின் தோற்றம் என்பது உண்மையிலேயே ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் பண்டைய பேரரசுகள் உதயமான ஈரானிய பூமியில்தான்.

சமோசா தற்போதைய முக்கோண வடிவம் பெற்றது எப்போதென தெரியாது என்றபோதும் இதன் துவக்க கால பெயர் என்னவென்றால் ’சன்போஸக்’ என்பதுவே.

மாலை வேளையில் காரமாகவும், மொறுமொறுவென்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் மழைக்காலம் என்பதால், இந்த காலத்தில் மாலையில் நிச்சயம் சூடாக எதையாவது செய்து சாப்பிட வேண்டுமென்று ஆசைப்படுவோம்.

அப்போது கடைகளில் இருந்து சமோசாக்களை வாங்கி வந்து சாப்பிடாமல், அவற்றை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இப்போது சமோசாக்களில் ஒன்றான வெங்காய சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.