உங்கள் கைப்பேசி விரைவாக சார்ஜ் ஆகி நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க அற்புதமான வழிகள்..!!

செல்போனை இரவு நேரத்தில் சார்ஜ் செய்யும் போது விரைவில் மின்னேற்றம் ஆகலாம். குறிப்பாக பிளைட் மோடில் போடும்போது, செல்போனின் அனைத்துவித செயல்களும் நிறுத்தப்பட்டு விரைவில் சார்ஜ் செய்யப்படும். உங்களது எண்ணிற்கு அதிகமான அழைப்புகள் வருமே ஆயின், இந்த செயலை இரவில் மட்டுமே செயல்படுத்துவது நல்லது. போனில் உள்ள தேவையற்ற அப்ளிகேஷனை நீக்குவதாலும் ஓரளவு மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம்.


சிலர் இரவு முழுக்க செல்போனை சார்ஜ் செய்வதுண்டு. இப்போது வரும் செல்போன்களில், ஒருமுறை தேவையான ஆற்றலை சேமித்த பின்னர் தானகவே நிறுத்திக்கொள்ளும்படி சிப்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் செல்போன்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது.

இருப்பினும் மின் இணைப்பு தனது வேலையை தொடர்ந்து செய்வதால் மின்னாற்றல் வீணாகும். கைபேசியின் தரத்தை பொறுத்தே இந்த நிலை மாறுபடுகிறது. அதிகப்படியாக பேட்டரியின் ஆயுட்காலம் பாதிக்கப்படலாம்

மற்றொரு ஆபத்து என்னவென்றால், சார்ஜரில் உள்ள மின்மாற்றியில்(transformer) இரண்டு காயில்கள் இருக்கும். ஒன்று மின் இணைப்புடனும் மற்றொன்று செல்போனுடனும் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். மின் தூண்டுதல் விதிப்படி ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மின்னூட்டம் பாய்ந்து கொண்டிருக்கும். ஸ்விட்சை ஆப் செய்திருந்தாலும் சில மணித்துளிகள் ஒரு காயிலில் மின்னுட்டம் இருக்கும்.

இந்தநிலையில் செல்போன் கனெக்ட் செய்திருக்கும் போது, பேட்டரியின் ஆயுட்காலம் குறையலாம். ஸ்விட்சை ஆப் செய்தாலும் மறக்காமல் செல்போனை டிஸ்கனெக்ட் செய்யுங்கள். இதனால் என்னதான் தரமான பேட்டரியாக இருந்தாலும், மற்ற மின் சாதன பொருட்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம்.