மின்விசிறியை மெதுவாகச் சுற்றவிட்டால் மின் கட்டணம் குறையுமா..? உங்களுக்கு ஒரு நுணுக்கமான இரகசிய ஐடியா.!

அம்மாயி வீட்டு போகும் போது எல்லாம், எப்போ பார்த்தாலும் ஃபேன் மெதுவாவே சுத்திகிட்டு இருக்கும். ஸ்பீடு 2 தாண்டி வைக்கவே மாட்டாங்க. “என்ன அம்மாயி, கொஞ்சம் ஸ்பீடு அதிகம் வெச்சா குடியா முழுகி போயிரும்னு” கேட்டா, கரண்ட் பில் யாரு சாமி கட்டுறது.


நம்ம ஊருக்கு இந்த வேகம் போதும்னு சொல்வாங்க. சின்ன வயசுல, பெருசா இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. பெருசாக பெருசாக விவரம் தெரிய ஆரம்பிச்சிருச்சு.

ஃபேன் ஸ்பீடு குறைச்சு வெச்சா, கரண்ட் பில் குறையும்னு, அம்மாயி சொன்னது, அப்போ தப்பு, ஆனால் இப்போ சரி. அதெப்படின்னு கேட்கறீங்களா.? அந்த காலத்துல “படக்” “படக்”ன்னு திருகும் டைப்பில் ரெகுலேட்டர் இருக்கும். அதில் என்ன தான் வேகம் குறைத்து வைத்தாலும், மின்சார இழப்பு ஏற்பட்டு, ஒரே மின்சார பயன்பாடு தான் எல்லா ஸ்பீடுக்கும் இருக்கும். அப்போ எவ்வளவு ஸ்பீடு குறைத்து வைத்தாலும், ஸ்பீடு 5ல் ஓடுவதை போலத்தான் மின்சாரம் செலவாகி இருக்கும்.

ஆனால், தற்போது புழக்கத்தில் உள்ள சிறிய எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை பயன்படுத்தி மின்விசிறியின் சுழற்சி வேகம் குறைத்தால் அதற்கேற்ப மின்சார சிக்கனமும் ஏற்படும். அந்த காலத்தில் இருந்த ரெகுலேட்டர்களை போல இல்லமாமல், சிறிய அளவில், ஸ்விட்ச் போலவே உருளை வடிவில் இருக்கும். எளிதாக கையாளவும் முடியும். இதில் எந்த அளவுக்கு வேகத்தை குறைக்கிறோமோ, அந்த அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்படும். படிப்பறிவு இல்லையென்றாலும், அம்மாயி அப்போ சொன்னது, இப்போ நிஜமாகி இருக்கு.

இன்னமும் கிராம பக்கம் சில வீடுகளில் பழைய டைப் ரெகுலேட்டர் இருக்கும். அங்கு மின்சிக்கனம் என்று சொல்லி மெதுவாக ஃபேன் சுற்றவிட்டு இருந்தால், சொல்லி புரிய வையுங்கள். ஒரு பத்து வருட தலைமுறை கேப் தான், அதற்குள் இத்தனை மாற்றம். இதோடு முடிந்து விடப்போவதில்லை. அடுத்து ஏசி போல ரிமோட்டில் ஃபேன் ஸ்பீடு கண்ட்ரோல் செய்யும் டெக்னாலஜியும் பரவலாக எல்லா வீடுகளுக்கும் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.