அத்தை-மாமா வகையில் மணம் முடிக்கலாம், ஆனால் சித்தி-சித்தப்பா மகளை மணக்க கூடாதா? எதன் அடிப்படையில் இப்படியொரு முறை வந்தது?

முன்னொரு காலத்தில் சில மதங்களில் அம்மாவின் சகோதரி மகளை மணக்கும் வழக்கம் உள்ளதே? நம் மதத்தில் மட்டும் என்ன அத்தை-மாமா மகளை மட்டும் தான் கல்யாணம் செய்துக்கணும், சித்தி அல்லது பெரியம்மா மகளை தங்கை அல்லது அக்காவாக பாவிக்கணும் என்ற விதி உள்ளதே?


என விளையாட்டாக என் அப்பாவிடம் இந்த கேள்வியை கேட்டற்கு, அகராதி புடுச்சவன் தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்குறான், மடப்பைய தங்கச்சிய கட்டுவானாமே? என திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் இது என்ன பேசக்கூடாத டாப்பிக்கா? இவங்க பதில் சொல்லவில்லை என்றால் வேறு எங்கும் பதில் கிடைக்காத என பதிலை தேடி அலச ஆரம்பித்தேன்.

மருத்துவ ரீதியாக சித்தி, பெரியம்மா போன்ற உறவுகளில் மட்டுமின்றி, அத்தை-மாமா உறவுகளிடத்தும் திருமணம் செய்துகொள்வது தவறு என்பதை காட்டிலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பெரும் உடல் குறைபாடு ஏற்பட்டு விட வாய்ப்புண்டு.

அதனாலே இரத்த உறவுகளில் திருமணம் செய்வதை தற்போது பலர் தவிர்த்து வருகின்றனர். அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா எல்லாமே இரத்த உறவு தானே? இவற்றுள் மாமா மகளை திருமணம் செய்துகொள்ள வாய்ப்புண்டு, அவரிடம் நாணம், காதல் கொள்ளலாம். ஆனால் அம்மாவின் சகோதரி மகளை தங்கையாக பாவிக்க வேண்டும் என்பது எதன் அடிப்படையில்? என்பது தான் விளங்கமாட்டேங்குது.

சொத்துக்கள், சேமித்த செல்வங்கள் வெளி சொந்தங்களுக்கு சென்றுவிடாமல் இருக்கவே பெரும்பாலும் அம்மாவின் அண்ணன் அல்லது அண்ணன் மகன் அல்லது அப்பாவின் சகோதரி மகன் என சொந்தத்திற்குள்ளே மணம் முடிக்கும் வழக்கம் உருவாயிற்று. நாளுக்கு நாள் இரத்த சொந்தத்திற்குள் திருமணம் மெல்ல மெல்ல தவிர்க்கப்பட்டது.

கேள்விக்கு வருவோம். சித்தி,சிற்றப்பா என்பதும் நெருங்கிய உறவு தான் இருப்பினும் அத்தை, மாமா உறவில் மட்டும் திருமணம் செய்து கொள்வது ஏனோ? இதை ஆரம்பித்தவர்களிடம், இந்த கேள்வியை கேட்டால் தான் விடை கிடைக்குமோ?