தேங்காயை எப்படி வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்? ஓ! இதுதான் அந்த இரகசியமா?

ஒவ்வொன்னுக்கும் ஒரு ட்ரிக்ஸ் இருக்கு. மீன் எடுத்து ரெண்டு நாள் வெளிய வெச்சா, குடலை பிடுங்கும் நாற்றம் வரும். அதே மீனை காய வைத்து கருவாடாக மாற்றினால், மாதக்கணக்கில் கூட வைத்து சாப்பிடலாம். அதெப்படி வெறும் மீன் நாற்றம் வருது, கருவாடா ஆக்கிய பின்பு வாரக் கணக்கில் இருந்தாலும் கெட்டுப்போவதில்லை.? எல்லாம் வைக்கும் பக்குவத்தில் தான் இரகசியமே இருக்கு.


அது போல தேங்காயை எப்படி வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். ஒரு சிலருக்கு நுணுக்கம் தெரிந்து இருக்கும். இதைப்பற்றி கேள்விப்படாதவர்கள் இப்போ அந்த இரகசியத்தை தெரிஞ்சுக்கலாம். பொதுவா மட்டையை உரிக்காமல் வைத்திருந்தால் 2 மாதம் வரைக்கு கூட தாங்கும்.

அதுவே மட்டையை உரித்து, ஒரு சுவர் ஓரமாக, உரித்த தேங்காய் குடுமி மேலே வருமாறு நிற்க வைத்தால் இரண்டு வாரம் வரைக்கு தாங்கும். இப்படி வைத்திருக்கும் போது தேங்காயின் வெளிப்புறம் சில சமயம் வெடிக்கும். எனவே ஈரமான துணியை மேலே போட்டு வைக்க வேண்டும். ஆக மொத்தம் கண் இருக்கும் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

தேங்காய் மேல், கொஞ்சம் மஞ்சள் குழைத்து பூசி வைத்தாலும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். தேங்காய் உள்ளே இருக்கும் நீரும் வற்றாது. அதனால் தான், பூஜைக்கு வைக்கும் கலசத்தேங்காவிலும் மஞ்சள் பூசுகிறார்கள். தேங்காய் தண்ணி முக்கியமில்லை என்றால், உடைத்து சில்லுகளாக வெட்டி எடுத்து, அதனை உப்பில் வைக்கலாம். யப்பா! ஒரு சின்ன விஷயத்துக்கு பின்னால் எத்தனை இருக்கு பாருங்க.