உரும்பிராய் பிரதேச இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு.!! இந்தக் காலத்தில் இப்படியும் இளைஞர்களா.? குவியும் பாராட்டுக்கள்.!

உலகெங்கிலும் கொடிய கொரோனா நோய்த் தாக்கம் மெல்ல மெல்ல மறையத் தொடங்குவது போல ஒரு விம்பம் உருவாகியிருக்கும் நிலையில், எமது நாட்டிலும் அரசாங்க நிறுவனங்கள் முதற்கொண்டு தனியார் நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மெல்ல இயங்கத் தொடங்கியிருக்கின்றன. இன்னும் சில வாரங்களில் பாடசாலைகளும் இயங்கத் தொடங்கிவிடும் என்ற அரசின் அறிவிப்புகளுக்கு மத்தியில், எமது யாழ் மாவட்டத்திலும் பல்வேறு மட்டங்களில் எமது சூழலை சுத்தமாக்கும் நடவடிக்கைள் ஆரம்பமாகிவிட்டன.அந்த வகையில் யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் மைந்தர்கள் பலரும் ஒன்றிணைந்து நேற்று(14.06.20)  முழு நாளும்  பாரிய சிரமதான நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். பாடசாலைக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும், தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தில் உரும்பிராய் பிரதேச இளைஞர்கள் பலரும் ஒன்றிணைந்து எமது இளைய சமுதாயத்தின் வளமான கல்விக்காக,  பாடசாலைச் சூழலில் சிரமதானம் மற்றும் பாடசாலைக் கட்டிங்களை மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அத்துடன் தமது பாடசாலையின் உட்புறச் சுவர்களுக்கு அழகான முறையில் வர்ணம் பூசியதுடன் வரவேற்பு நுழைவாயிலையும் வர்ணம் கொண்டு அலங்கரித்துள்ளனர். கொரோனா காலம் முடிந்து கல்வி கற்கத் திரும்பும் எமது இளைய சகோதர சகோதரிகள் ஓரு ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க வேண்டும் என்ற இவர்களின் உயரிய சிந்தனைக்கு, இந்த செயற்பாடு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு.நாட்டில், காலத்தின் கோலமாக எமது இளைய சமுதாயம் தறிகெட்டும் திரியும் இந்தக் காலத்தில், எமது சூழலையும் எமது இளைய சந்ததியின் சிறப்பான எதிர்காலத்திற்காக செயற்பட்ட இந்த இளைஞர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.. இவ்வாறான இளைஞர்களின் முன்மாதியான செயற்பாட்டை, கிராமத்து பெரியோர்கள் பொதுமக்கள் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.