பல்வேறு பாதுகாப்பு வேலிகளையும் தாண்டி மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய 277 கொரோனா நோயாளிகள்.!! சென்னையில் பரபரப்பு.!

தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையில்தான் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களில் 277 பேர் மாயமாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை கண்டறிய மாநகர பொலிஸாரின் உதவியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நாடியுள்ளனர். சென்னையை பொறுத்தவரை, கொரோனா அறிகுறி அல்லது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களின் முகவரி, மொபைல்ஃபோன் ஆகிய விவரங்கள் பரிசோதனை மையங்கள் மூலம் மாநகராட்சி அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது. ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிவு பாசிட்டிவாக வந்தால், சம்பந்தப்பட்ட நபர்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், அவர்களை மொபைல்ஃபோனில் தொடர்பு கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பார்கள். இப்படியிருந்தும் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் 11 ஆம் திகதி வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 277 பேர் மாயமாகிவிட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இனி இந்த 277 பேரும் எத்தனை பேருக்கு நோய்த் தொற்றை கொடுக்கத் இருக்கிறார்களோ தெரியவில்லை.