நுகர்வோருக்கு ஓர் நற்செய்தி…மிக விரைவில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்..!

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக உயர் மட்ட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை பாரிய அளவு குறைவடைந்துள்ளது. எனினும் குறித்த காலப்பகுதியில் அரசாங்கம் நிதி நெருக்கடியான காலப்பகுதிக்கு முகம் கொடுத்தமையினால் விலை குறைக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதன் மூலம் 800 கோடி ரூபாய் பணம் சேமிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.தற்போதைய நிலையில் உலக சந்தையின் எரிபொருள் விலையை ஆராய்ந்து நிவாரணம் ஒன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கமைய பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணையின் விலை பாரிய அளவு குறைவடையு மெனஎதிர்பார்க்கப்படுகின்றது.