முன்னிரவு வேளையில் வீடு புகுந்து வாள்வெட்டு.!! பெண் உட்பட ஐவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்.!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியுள்ளனர்.அத்துடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவத்தில் பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.