வீதியில் செல்லும் பெண்பிள்ளைகளுக்கு தொல்லைகொடுத்த இளைஞர்களுக்கு யாழில் நடந்த கதி..!

யாழில் வீதியால் செல்லும் யுவதிகளுடன் சேட்டை விட்ட நான்கு இளைஞர்கள் நன்கு கவனிக்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் கலட்டிச் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கலட்டி வீதி பகுதியில் தினமும் ஒன்றுகூடும் மன்மதராசாக்கள் சிலர், இந்த வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டை விடுவதையே நாளாந்த கடமையாக எண்ணிச் செயற்பட்டு வந்தனர்.அவர்களின் தொல்லை தாங்க முடியாமல், தமது வீடுகளில் அந்தப் பெண் பிள்ளைகள் முறையிட்டுள்ளனர்.இதையடுத்து, அந்தப் பெண்களின் உறவினர்களான இளைஞர்கள் ஒன்றுகூடி, சேட்டையிலீடுபட்ட நான்கு பேரையும் நையப்புடைத்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.