இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வெகு விரைவில் ஏற்பட கூடும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வடபகுதிக்கு வரும் இந்திய வர்த்தகர்களின் மூலம் இந்த நிலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தான நிலையாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா ஏற்பட்ட முதலாவது அலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.எனினும், சட்டவிரோதமாக வந்தவர்களை அடையாளம் காணுவதும் பாரிய சிக்கலாக மாறிவிடும் என சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் கட்டுப்படுத்தவில்லை என்பதனால் நாட்டிற்குள் சட்டவிரோதமாக வரும் நபர்களை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் இலங்கை மிகவும் ஆபத்தான நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.