உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மிக முக்கிய செய்தி….உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.!!

க.பொ.த உயர்தர பரீட்சை திகதி தொடர்பாக இறுதிப் பரிசீலனைகள் இடம்பெற்று வருவதால் பரீட்சைகள் மேலும் பிற்போடப்படலாமென கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்திரானந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 05 திகதியில் நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில்,ஆகஸ்டில் நடக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறுமென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அண்மையில் கூறியிருந்தார்.இதுதொடர்பில் கல்விசார் நிபுணர்கள் விடுத்து வரும் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி திகதி பரிசீலிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.