பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய கடுமையான நடைமுறைகள்…!! கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்..!!

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் போது மாணவர்கள் ஒன்று கூடுதல் அல்லது குழுவாக இணைந்து செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


அதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு ஓய்வு நேரத்தை ஒரே நேரத்தில் வழங்காமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்குமாறு, பாடசாலை பொறுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வகுப்பறையில் சமூக இடைவெளியை பின்பற்ற கூடிய அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு, பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது முடிக்கும் போதும் மாணவர்கள் ஒன்று கூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவர்கள் இருவருக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளியை வைத்துக் கொள்வதற்காக வகுப்பறைகளை மாற்றுமாறுமு் வகுப்பறையின் இடவசதியை மீறி செல்லாத வகையில் செயற்படுமாறும் பாடசாலை பிரதானிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை விஞ்ஞான பரிசோதனை மற்றும் பற் சோதனைகளை மீள் அறிவிப்பு வரை நடத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.விளையாட்டு, கல்வி சுற்றுலா, ஒன்று கூடி மேற்கொள்ளும் செயற்பாடுகள் உட்பட மாணவர்கள் இணைந்து செயற்படும் அனைத்து விடயங்களையும் தவிர்க்குமாறு பாடசாலை அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைவெளியை பேனுவதற்காக மாணவர்கள் பயணிக்கும் பகுதிகளில் அம்புக்குறிகள் மூலம் சுட்டிக்காட்டுமாறு, ஒருவருக்கு ஒருவர் உரசிக்கொள்ளாமல் செயற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆலோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.கழிப்பறைகளை பயன்படுத்தும் போது ஒரு மீற்றர் இடைவெளி பின்பற்ற வேண்டும். ஒரு மாணவர் பயன்படுத்தி விட்டு கட்டடத்தை விட்டு வெளியேறிய பின்னரே இன்னும் ஒருவர் செல்ல வேண்டும்.அத்தியாவசிமான சந்தர்ப்பத்தில் ஊழியர்கள் மாத்திரம் ஒன்று கூடி கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும். அந்த சந்தர்ப்பங்களிலும் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.பெற்றோர் பாடசாலை நுழைவாயிலுக்கு அருகில் ஒன்று கூடுவதனை தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சின் ஆலோசனைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.