கணவன் மனைவி மோதலின் விளைவு…தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்த இளம் குடும்பப் பெண்.!!

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்டிருந்த மோதலினால் தனக்கு தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கு பகுதியை சேர்ந்த (வயது 28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் வசித்து வரும் குடும்பப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால், கடந்த 5 ஆம் திகதி குறித்த குடும்பப் பெண் கணவனின் சித்திரவதையை தாங்காது தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.தீக்காயத்திற்குள்ளான அவரை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.