இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால் இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்து… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

இந்தியாவில் இருந்து இலங்கையின் வட பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் வரும் வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களால் இலங்கையில் கொரோனா பரவலின் இரண்டாம் சுற்று ஆரம்பமாகலாம் என சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்ப் பரவல் அதிகரித்துள்ளதுடன் தினமும் அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையும் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்தப்படாமல் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தான மற்றும் பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.