தொழில் புரியக் கூடியவர்களின் வயது எல்லையில் திடீர் மாற்றம்…!

இலங்கையில் சட்ட ரீதியாக தொழில் புரியக் கூடிய நபர்களின் வயதை 14 இல் இருந்து 16 ஆக அதிகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

உலக சிறார் தொழிலாளிகளுக்கு எதிரான தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை கூறியதாகவும் அமைச்சர் தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.