கொரோனாவினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் கொரோனா தொற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 180 பேரில் 132 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.