காதல் தோல்வியால் காகம் தற்கொலை செய்து கொள்ளுமா? இதுவரை உலகம் அறியா தெய்வீக காதல் சரித்திரம்!

இந்த பூமியில் காதல் மனித இனத்துக்கு மட்டும் உரித்தானது அல்ல. காகத்தின் காதல் கதையை கவிஞர்கள் கேட்டால், இனி காதலை வர்ணிக்கும் கவிதைகளில் காகமும் வந்துவிடும். உண்மையாகவே காதல் தோல்வியால் காகம் தற்கொலை செய்து கொள்கிறதா? என்று கேட்டால், ஆமாம் என்றே சொல்லாம்.


நமக்கு எப்படி காதல் உணர்வு வருமோ, அதே மாதிரி பல மடங்கு உணர்ச்சிமிக்கது காகத்தின் காதல் உணர்வு. சில நேரங்களில் தன்னுடைய ஜோடியை ஈர்க்க, வானில் வித்தியாசமாக பறந்து அரோபாட்டிக்ஸ் வித்தைகள் காட்டுமாம். அப்படி ஒரு காகத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அது ரொமான்ஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

கல்லுக்குள் ஈரம் மாதிரி, காக்கைக்குள்ளும் காதல் இருக்கு. நாம என்னவோ புறாவை தூதுவிட்டு காதல் மழை பொழிந்து வருகிறோம். பிராக்டிக்கலாக பார்த்தால், காகம் தான் காதல் பறவை. மனிதர்களை போலவே நட்பு காதலாக மாறி, பின்னர் இணை சேர்க்கிறது. பல பேரை காதலித்து ஒருவரை கரம் பிடிக்கும் பழக்கம் எல்லாம், காக்கை இனத்தில் கிடையாது. தனக்கு பிடித்த ஜோடியுடன் மட்டும் தான் இணை சேருமாம். ஆண் காகம், பெண் காகத்தை ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை.

ஆண் காகமும், பெண் காகமும் இணைந்து இனம் விருத்தி ஆகும் வரையில் மட்டும் தான், மகிழ்ச்சியாக இருக்கும். முட்டையிடும் நேரம் வந்தவுடன், ஆண் காகம் கூடு கட்ட ஆரம்பிக்கும். அதோடு முடிந்தது ஆண் காகத்தின் காதல் வாழ்க்கை. முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும் வரையில் பெண் காகம் கூட்டை விட்டு வெளியவே வராதாம். அடையில் இருக்கும் நாட்களில், பெண் காகத்துக்கு உணவு, தண்ணீர் கொடுப்பது எல்லாமே ஆண் காகத்தின் வேலையாக இருக்கும்.

குஞ்சு பொரித்தவுடன், பெண் காகம், ஆண் காகத்தை வெறுத்து ஒதுக்கிவிடும். காதல் உணர்வு மெல்ல மெல்ல குறைந்து, குஞ்சுகளை கவனிக்க தொடங்கும். குஞ்சுகள் வளரும் வரையில் ஆண் காகம் பற்றிய நினைப்பே இருக்காதாம்.

இந்த நேரத்தில் விரக்தியடையும் ஆண் காகம், காதல் தோல்வியில் செய்வதறியாது திகைத்து நிற்கும். காதல் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல், சோறு, தண்ணீர் உண்ணாமல் இருந்து, தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ளும். அதோடு அல்லாமல், மரத்தில் மோதியும், கிளைகளுக்கு இடையில் கழுத்தை சொருகியும் சாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.