வெயில் காலத்தில் சிமெண்ட் ஷீட் போட்ட வீட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லையா? உங்களுக்கு ஒரு அருமையான டிப்ஸ்..!! ஒரு நாடே இதைப் பயன்படுத்தும் அதிசயம்..!!

வெயில் காலம் ஆரம்பித்தது தான் ஆரம்பித்தது, சிமெண்ட் ஷீட் போட்ட வீட்டினுள் இருக்க முடியவில்லை. வெளியே இருப்பதற்கும் வீட்டினுள் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லாதது போல தான் உள்ளது. எப்போதுமே அடுப்பின் அருகில் நிற்பது போலவே ஒரு உணர்வு.

அப்போது தான் நண்பர் ஒருவர், அவர் வீட்டிற்கு வித்தியாசமாக ஒரு தொழில்நுட்பத்தை செயல்படுத்தி கொண்டிருந்தார். அது என்னவென விசாரித்த பின்னர் நாங்களும் எங்க வீட்டிற்கு இந்த முறையை முயற்சி செய்தோம். அதன் பின்னர் ஆற்றங்கரையை கடந்து செல்வது போல, வீட்டிற்குள் காற்று அப்படியே சிலுசிலுவென வீசுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் செய்முறை காணொளி,

வீட்டுக்கு வெளியே உள்ள காற்றானது புனல்வடிவ நெகிழி குடுவையின் வாயில் வழியே வீட்டிற்குக்குள்ளே வரும் போது, மின்சாரம் இல்லாமலே காற்று குளிரூட்டப்படுகிறது. வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் நுழைவில் இந்த இயற்கை குளிரூட்டியை செய்து வைத்துள்ளோம். சிமெண்ட் ஷீட்டின் அனலான காற்று இந்த இயற்கை குளிரூட்டியால் ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

பங்களாதேஷில் பெரும்பாலான வீடுகள் தகரத்தால் செய்யப்பட்டிருக்கும். கோடை காலத்தில் இங்குள்ள மக்களின் வேதனையை புரிந்து கொண்ட ஆசிஷ் பால் என்பவர், மக்களுக்காக இதனை வடிவமைத்து வழங்கியுள்ளார். இதுவரை அங்குள்ள 25,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

அதிக அழுத்தத்தில் உள்ள காற்றானது திடீரென விரிவடைகையில் அதன் வெப்ப நிலை குறையும் அல்லது அனலான காற்றை குறுகலான பாதைக்குள் செலுத்தும் போது குளிரூட்டப்படுகிறது என்ற தத்துவத்தின் கீழ் இந்த குளிரூட்டி இயங்குகிறது. அதாவது 5 முதல் 10 டிகிரி வரை வெப்பம் குறைகிறது. தேவை தான் கண்டுபிடிப்பின் அன்னை என்பது ஆசிஷ் பால் அவர்களின் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.