உண்மைதான் நம்புங்கள்.!! பச்சை நிற முட்டைகளைப் பற்றி கேள்விப்பட்ட துண்டா? விரைவில் உங்கள் தட்டிற்கு!!

காலையில் ஆம்லெட் போட முட்டையை உடைக்கும் போது அதன் கரு மஞ்சள் நிறத்தில் இல்லாமல் பச்சை நிறமாக இருந்தால் உங்களது ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? முட்டையை வேக வைக்காமல் பச்சையாக முட்டை குடிப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் இங்கு முட்டையின் நிறமே பச்சை தான். என்ன விசித்திரம்?


ஆமாங்க! கேரளாவில் வீட்டு பண்ணையில் உள்ள ஒரு கோழி இடும் முட்டைகள் அனைத்துமே பச்சை நிற கருவைத்தான் கொண்டுள்ளன. இது குறித்து இதன் உரிமையாளர் கூறியது, திடீரென பண்ணையில் உள்ள ஒரு கோழி மட்டும் மஞ்சள் மற்றும் பச்சை கலந்த நிறத்தில் முட்டையிட்டது. அதனை நாங்கள் பயன்படுத்தவில்லை. அவ்வாறே கோழி அடுத்து போட்ட முட்டைகள் அனைத்தும் இப்படியே இருந்தது. அவற்றை அடைகாக்க ஆரம்பித்தோம். அந்த முட்டைகளில் இருந்து வந்த கோழிகளும் முட்டையிட தொடங்கியுள்ளன. அவற்றின் மஞ்சள் கருக்களும் பச்சை நிறத்திலே உள்ளன. இதற்கான காரணத்தை கேரள கால்நடை மற்றும் விலங்குகள் நல அறிவியல் ஆய்வகம் ஆராய்ச்சி செய்து வருகிறது. விரைவில் பச்சை கருவிற்கான காரணம் தெரியவரும்.

வித்தியாசமாக உள்ளது என சிலர் இதனை உண்ண விருப்பம் காட்டினாலும் சின்ன நெருடல் எப்போதுமே மனதை ஆட்கொண்டிருக்கும். இயற்கை என்னவோ சொல்ல நினைப்பது போலவே! விரைவில் பச்சை முட்டை சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இனிமேல் யாரவது நான் காலையில் பச்சை முட்டை குடிக்கிறேன் என்றால் அவரிடம் சரியாக கேட்டு உறுதி படுத்திகொள்ள வேண்டும். அது பச்சை முட்டையா? அல்லது பச்சை நிற கரு கொண்ட முட்டையா? என்று.