ஒருவரின் மொபைல் இலக்கத்தை வைத்து அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியுமா ? பல்லாயிரக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் மென்பொருள்!!

இரண்டு வாரங்களுக்கு முன்பு +1 என்று தொடங்கும் எண்ணில் இருந்து, தொலைப்பேசி அழைப்பு வந்தது. என்னடா இது புது நெம்பரா இருக்கே என்று தேடிப்பார்த்தால், அது அமெரிக்க மொபைல் நம்பர் என்பது தெரிய வந்தது. நமக்குத்தான் அமெரிக்காவில் யாரும் நண்பர்கள் இல்லையே, பிறகு எப்படி கால் வந்தது என்று ஒரே குழப்பம். அப்போ தான், மொபைல் நம்பரை வைத்து, யார் அழைத்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியுமா? என்ற யோசனை தோன்றியது.

அதில் சிக்கியது தான் Eyecon எனும் மொபைல் செயலி. ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் தகல்களை கண்டுபிடிக்க இந்த ஆப் உதவுமாம். மொபைல் நம்பரை வைத்து மற்றவர்களின் புகைப்படம் மற்றும் பல்வேறு தகவல்களை கொடுக்கும் திறமைக் கொண்டுள்ளது.

இந்த செயலி பேஸ்புக்கின் ஆதரவுடன் செயல்படகூடியது நீங்கள் பேஸ்புக்கில் இணையாதவராக இருந்தால் இது பயனற்றது. அதே போல ப்யூச்சர் போன் உபயோகிப்பவர்களை இந்த செயலியால் கண்டுபிடித்து கொடுக்க முடியாது. அதைத்தவிர ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்த ஆப் கட்டிக்கொடுத்துவிடும்.

இதனை பயன்படுத்த முதலில் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் Eyecon செயலியை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.அடுத்து இந்த செயலியில் மொழியை தேர்வு செய்ய வேண்டும், பின்பு நாடு மற்றும் உங்கள் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.

அடுத்து நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்களுக்கு OTP அனுப்பிவைக்கப்படும். அதன்பின்பு Eyecon செயலியில் உங்கள் புகைப்படம் மற்றும் பெயரை பதிவிட வேண்டும்.பின்னர் Eyecon செயலியில் search contacts எனும் பகுதியில் உங்களுக்கு தேவைப்படும் நபரின் மொபைல் எண் கொடுத்து, அவரின் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.இந்த செயலியில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற இணைப்புகள் இடம்பெற்றுள்ளன, இவற்றை பயன்படுத்தி கூட மிக எளிமையாக தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

#Mobile trick: இதுவரை Eyecon செயலியை பல்லாயிரக்கணக்கான மக்கள் உபயோகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.