எறும்புகள் ஏன் ஒன்றன் பின் ஒன்றாக செல்கின்றன.? விடை தெரியுமா உங்களுக்கு.?

நாம் எப்படி நமது கருத்துக்களை வெளியே சொல்ல சொற்களை பயன்படுத்துகிறோமோ அதுபோல்தான் எறும்புகள் தங்களது கருத்தை தனக்கான கூட்டமைப்பில் வெளிப்படுத்த பெரமோன்களை பயன்படுத்துகின்றன. இந்த பெரமோன்கள் மூலம் தான் மற்ற எறும்புகளுக்கு மெசேஜ்கள் பரிமாற்றப்படுகிறது. முன்னே செல்லும் எறும்பு பெரமோன்கள் வழியே கூறவரும் செய்தியை, பின்னே வரும் எறும்பு புரிந்து கொண்டு அதன்படி நடக்கிறது. இப்படி செய்தி பரிமாற்றத்திற்கு உதவும் பெரமோன்கள் என்ன என யோசிக்கிறீர்களா? மனிதனுக்கு ஹார்மோன்கள் எப்படியோ அப்படித்தான் இந்த பெரமோன்கள் சுரப்பி எறும்புகளுக்கு.


இது பற்றி மேலும் அறிய வரிசையாக எறும்புகள் செல்லும் பாதையில் ஒரு தடையை ஏற்படுத்துங்கள். அதன் பின் வரும் எறும்புகள் கண்டிப்பாக குழப்பமடையும். ஏனெனில் இந்த பெரமோன்கள் எளிதில் ஆவியாகி அதன் வாசனையை இழக்கும் தன்மையை கொண்டவை.

அதனாலே பின்னர் வரும் எறும்புகள் தனது பாதையை மாற்றிக்கொண்டு செல்கின்றன. ஒவ்வொரு எறும்பும் தனது பெரமோன்களை வழியில் சுரந்து கொண்டே செல்லும். தலைவர் எறும்பு சொல்வதை பின்னே வரும் வேலை எறும்புகள் ஏற்று நடக்க உதவும் கம்யூனிகேஷன் கருவிதான் பெரமோன்கள்.

எறும்பை பற்றி பேசும் போது ஒரு பழமொழி நியாபகம் வருகிறது. ‘எறும்பு ஊற கல்லும் தேயும் என்கிறார்களே’ இது உண்மையா? காற்றினாலும் நீரினாலும் கூட கல் தேய்கிறது, அப்படி இருக்க எறும்பு ஊறினால் கல் தேயாதா என்ன?