சீனாவில் 56 நாட்களின் பின் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!

சீனாவில் 56 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா முடிவுக்கு வந்து விட்டதென கருதப்பட்ட நிலையில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று இருப்பது நேற்றையதினம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி இருப்பதால் பாடசாலைகள் திறப்பதை நகர நிர்வாகம் நிறுத்தியுள்ளதுடன், இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.