நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் வாடகை செலுத்தும் கைதிகளின் சொகுசு வாழ்க்கை!! சந்திக்கு வராத சங்கதிகள்.!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் ஆடம்பர பொருட்களை பயன்படுத்துவது குறித்து சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறைச்சாலையில் அடிக்கடி சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டு கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்படும் செய்திகள் வெளியாகினாலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் சில கைதிகள் அதி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தனர் என அந்த ஊடகச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதிகள் சிலர் குளிர்சாதன பெட்டி, மைக்ரோ அவன் உள்ளிட்ட வசதிகளுடன், சிறையில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.சிறைச்சாலை அதிகாரிகளின் துணையுடன்தான் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஒஸ்டின் என்பவர் குளர்சாதன பெட்டியும், இந்திய கைதியொருவர் மைக்ரோ அவனும் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.சிங்கள ஊடக செய்தியின்படி, சிறைச்சாலை கண்காணிப்பாளர் செல்வாக்கை பயன்படுத்தி பிற சிறைச்சாலைகளில் இருந்து பல போதைப்பொருள் கைதிகளை நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றியதாக குறிப்பிட்டு, மாற்றப்பட்ட சிறைக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது.பல போதைப்பொருள் கைதிகள் மாதாந்த குத்தகை பணம் போல செலுத்தி, சிறைக்குள் வசதிகளை பேணுகிறார்கள், சட்டவிரோத நடவடிக்கைகளை வழிநடத்துகிறார்கள் என அந்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இராணுவப்புலனாய்வு பிரிவு இதனை மோப்பம் பிடித்து, அது வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண் கைதியொருவர் அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பாதாள உலகக்குழுவை சேர்ந்த காதலனுடன் உல்லாசமாக இருந்து அவர் கரப்பமாகியதாகவும், தற்போது கருக்கலைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.