பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று..!!

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம், இன்று (13) எடுக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பல்கலைக்கழக உப வேந்தர்களை அழைத்து, நேற்று முன்தினம் (11) கலந்துரையாடலில் ஈடுபட்டதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.இதன்போது, முன்வைக்கப்பட்ட சில காரணங்கள், இன்று (13) மீளாய்வு செய்யப்படவுள்ளதாகவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவலையடுத்து, மூன்று மாதகாலமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை 3 கட்டங்களின் அடிப்படையில் திறக்க அரசாங்க அவதானம் செலுத்தியுள்ளது.இதேவேளை, மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, மருத்துவ பீடத்தை, 15 ஆம் திகதி திறப்பதற்கு ஏற்கெனவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.