கொரோனா நோயாளிகளின் கைகளுக்கு முத்தம் கொடுத்து கொரோனா மாற்றிய சாமியாருக்கு கொரோனாவினால் நேர்ந்த சோகம்.!!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் ஒன் அஸ்லாம் என்ற முஸ்லீம் சாமியார், கொரோனா நோயாளிகளின் கைகளில் கிஸ் அடித்து. அதனூடாக கொரோனாவை மாற்றுகிறார் என்ற செய்தி தீயாய் பரவி வந்தது. இதனை அடுத்து, பல நூறுபேர் அவரிடம் சென்று கைகளை நீட்டினார்கள்.எல்லோருக்கும் கிஸ் அடித்து, அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தார் ஒன் அஸ்லாம் சாமியார். ஆனால், எவருக்கும் கொரோனா மாறவில்லை.

இந் நிலையில், இவருக்கே கொரோனா தொற்றிக் கொண்டது. இதனால் சாமியார் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து இறுதியாக நேற்றைய தினம் அவர் உயிர் பிரிந்தது.இது இவ்வாறு இருக்க, குறித்த சாமியாரின் சீடர்களாக செயல்பட்ட 20 பேருக்கும் அவர் கொரோனாவை தொற்றுக் கொடுத்துவிட்டு தான் இறந்துள்ளார் என்ற அதிர்ச்சியான செய்தியும் வெளியாகியுள்ளது.சும்மா றோட்டில் சென்று கொரோனாவை கை தட்டிக் கூப்பிட்டு கையில் கிஸ் அடித்து வாங்கியுள்ளார் இந்தச் சாமியார்.