கொழும்பு புறநகர்ப் பகுதியான இரத்மலானையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி இயங்குவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
