ஜனாதிபதியின் 6 மாத நிவாரண காலத்தில் வாகனங்களைப் பறிமுதல் செய்தால்…லீசிங் நிறுவனங்களுக்கு இடியாக வந்த செய்தி..!!

லீசிங் கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு 6 மாதங்கள் நிவாரண காலமாக ஜனாதிபதி அறிவித்திருக்கும் நிலையில் குறித்த நிவாரண காலத்தில் வாகனங்களை பறிமுதல் செய்ய லீசிங் நிறுவனங்கள் முறைப்பாடு வழங்கினால், அதனைப் பரிசீலித்து பார்த்துவிட்டு நிராகரிக்குமாறும், நிவாரண காலத்திற்குள் தவணை பணம் செலுத்தவில்லை என வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால், இலங்கை தண்டணை கோவை சட்டத்தின் கீழ் களவு அல்லது கொள்ளை என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

பதில் பொலிஸ்மா அதிபரினால் நாட்டில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறியுள்ளார்.இதன்படி நிவாரண காலத்தில் கடன் தவணையை செலுத்தாமை காரணமாக கையகப்படுத்தப்படும் வாகனங்கள் தொடர்பில் வாகன உரிமையாளர்கள், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்தால், அதனை பதிவு செய்து, இலங்கையின் தண்டனை கோவை சட்டத்தின் கீழ், களவு அல்லது கொள்ளை ஆகிய குற்றங்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து,சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு வாகனங்களை கைப்பற்றிய பின்னர் குறித்த லீசிங் நிறுவனமோ, நிதி நிறுவனமோ முறைப்பாடுகளை மேற்கொள்ள வரும்போதும், அது தொடர்பில் உரிய நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், பதில் பொலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.