கனேடிய லொட்டரி வரலாற்றில் முதல் முறை! பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ள பெண்… மொத்தம் எவ்வளவு தெரியுமா?

கனடாவில் லொட்டரியில் $55 மில்லியன் பரிசை வென்றுள்ள பெண் நாட்டில் லொட்டரி டிராவில் ஏழு வெற்றி எண்களையும் அடித்த ஒரே பங்கேற்பாளார் என்ற பெருமையை பெற்றுள்ளார்.Yellowknife-ஐ சேர்ந்த Laura Tutcho என்ற பெண்ணே இந்த பெரும் பரிசை பெற்ற அதிர்ஷ்டசாலி ஆவார். இதன்மூலம் அவருக்கு இரண்டு பெருமைகள் கிடைத்துள்ளது.


அதாவது கனடாவில் லொட்டரி டிராவில் ஏழு வெற்றி எண்களையும் அடித்த ஒரே பங்கேற்பாளார் Laura தான்.இதோடு வடமேற்கு பிரதேசங்களின் மிகப்பெரிய லொட்டரி ஜாக்பாட் வெற்றியாளரும் Laura தான் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.இது குறித்து Laura கூறுகையில், லொட்டரியில் $55 மில்லியன் பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியும், உற்சாகமும் தருகிறது.

Yellowknife-ல் யாருக்கோ லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளதாக என் பேரன் சொன்ன பிறகே நான் அது குறித்து ஓன்லைனில் பார்த்தேன்.அப்போது பரிசு எனக்கு விழுந்ததை பார்த்து கடவுளே என ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியில் கத்தினேன், உடனே பேரன் என் அருகில் வந்து பாட்டி என்ன ஆயிற்று என கேட்டான்.பரிசு பணத்தை எப்படி முதலீடு செய்வது என நிதி ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்க தொடங்கியுள்ளேன்.முக்கியமாக உடனடியாக என் குடும்பத்தாருக்கு பரிசு பணத்தில் இருந்து உதவி செய்வேன் என கூறியுள்ளார்.