உங்களுக்கு குமட்டல், தலைச் சுற்றல் இருக்கின்றதா..? அப்படியாயின் தயவு செய்து இதைச் செய்யுங்கள்.!!

மழை காலம் ஆரம்பித்து விட்டால் இருக்கும் மிகப் பெரிய ப்ராப்ளம் என்ன என்றால் இருமல் சளி தான் இதற்கு ஏராளமான மருந்து இருந்தாலும் இலகுவான மருந்தாக துளசி இலை இருக்கிறது. துளசி இலை சாறு சிறிதளவு எடுத்து அதில் தேன் சிறிதளவு சேர்த்து மூன்று நேரம் குடித்தாலே இருமல் குறைந்து விடும்.


அது மட்டும் இன்றி ஏராளமான நோய்களுக்கு துளசி மருந்தாகிறது, துளசி இலைகளை எடுத்து நன்றாக கழுவி வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் குடல் புண் மற்றும் வயிறு சம்மந்தப் பட்ட நோய்களுக்கு தீர்வாகிறது. அதே போல் காலை எழுந்ததும் பித்தத்தினால் ஏற்படும் குமட்டல், வாந்தி போன்றவற்றிக்கு இரண்டு துளசி இலைகளை வாயில் போட்டால் போதுமானது.

முதுகு வலி, மூட்டு வலி, உள்ளவர்கள் கூட துளசி இலையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் எந்த தீங்கும் நடக்காது, எப்படி இதனை இறைவனுக்கு ஒப்பானது என வணங்குகிறோமோ அந்த அளவிற்கு உடலில் உள்ள நோய்களை அழிக்கக் கூடியது.

இதனை ஒரு கப் நீரில் சிறிது நேரம் ஊற வைத்து அதன் நீரை குடித்து இலையை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் கூட குறைந்துவிடுமாம். அதனால் வீட்டில் துளசி வளர்ப்போம் பயன் பெறுவோம்…!!