கடைக்கு போகாமல் வெறும் 2 பொருள் வைத்து சூப்பர் சுவையில் ஹல்வா ரெடி…!

சர்க்கரை – இரண்டரை கப்,சம்பா கோதுமை – ஒரு கப், எண்ணெய் – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், முந்திரி, பாதாம்,பிஸ்தா துண்டுகளின் கலவை – தேவையான அளவு,எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், நெய் – அரை கப்,வெள்ளரி விதை – ஒரு டீஸ்பூன், கேசரி பவுடர் – 2 சிட்டிகை,பாதாம் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) – சில சொட்டுகள்

செய்முறை:கோதுமையை நன்றாகக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் மறுநாள் நீரை வடித்து விட்டு, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதை எடுத்து சிறு, சிறு கண்ணுள்ள வடிதட்டில் போட்டு கரண்டியால் அழுத்தி பாலை வடித்து கொள்ளவும். பிறகு, மீண்டும் தண்ணீரை சேர்த்து அரைத்து பாலை வடிகட்டி கொள்ளவும். இதே போல மூன்று, நான்கு முறை பாலை வடித்து எடுத்து கொண்டு, இரண்டு மணி நேரம் தனியாக வைத்து கொள்ளவும்.

பாலின் மேலாக நீர் தெளிந்திருக்கும். இதனை பால் சிதறாமல் வடிகட்டி கொள்ளவும். மீண்டும், அரை மணி நேரம் வைத்திருந்து, மேலே தெளியும் நீரை வடித்துவிடவும்.சிறிதளவு நெய்யில் முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளின் கலவையை வறுத்தெடுக்கவும். பின்னர், எண்ணெய் – நெய்யைக் கலந்து கொள்ளவும்.நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், ஒரு கரண்டி எண்ணெய் – நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.

கோதுமைப்பால் கெட்டியாக வரும்போது மீண்டும் எண்ணெய் – நெய் கலவை சேர்த்துக் கிளறவும். கோதுமைப் பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வரை கிளறவும்.முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும். நெய் தடவிய தட்டில் பரத்தி சுடச்சுடவோ… ஆறிய பிறகு துண்டுகளாக்கியோ பரிமாறவும்.சுவையான கோதுமை அல்வா ரெடி.