அனைத்து சுவாச பிரச்சனைகளுக்கும் ஓரே தீர்வு!… மறந்து போன மருத்துவம்

தரிசு நிலங்கள், திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளரும் மருத்துவ குணம் நிறைந்த தாவரம் கண்டங்கத்திரி.இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை, இதற்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு.

உடல் நாற்றம் நீங்க:கண்டங்கத்திரி இலையை எடுத்து நன்றாக இடித்து சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சம அலவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள் பூசிவர நாற்றம் முற்றிலும் நீங்கும்.

ஆஸ்துமாவுக்கு மருந்து:கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து, உள்ளுக்குள்; சாப்பிட ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி ஆகிய நோய்கள் குணமாகும்.பல் வலி தீர:கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல்கூச்சம் தீரும்.

வெறிநாய்க்கடிக்கு மருந்து:கத்திரிப்பிஞ்சு, எள், வெல்லம் ஆகியவற்றைச் சம எடையளவு எடுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும். அதை 3 நாள்களுக்கு உப்பில்லாப்பத்தியம் மேற்கொண்டு, எலுமிச்சம்பழம் அளவு காலை, மாலை என உண்டு வந்தால், வெறி நாய்க்கடி தீரும்.