பொடுகுத் தொல்லையை நீக்க இனி மருந்துகள் எதுவும் தேவையில்லை..! பசளைக் கீரை மட்டும் போதுமாம்..!!

கண்ணுக்கு மை அழகு, காலுக்கு கொலுசு அழகு, பெண்ணுக்கு கூந்தல் அழகு என்று பலர் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பதே பெரிய சுமையாக இருக்கிறது. எவ்வளவுதான் முடியை பத்திரமாக பாதுகாத்தாலும் பொடுகு வந்தால் எல்லாம் பொசுக்கென்று போய்விடும்.

பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பொடுகு தொல்லை என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. இவ்வளவு பிரச்சனைக்கு காரணமான, பொடுகை இயற்கை வழியில் எப்படி நீக்குவது என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

பொடுகு ஏன் வருகிறது?வறட்சியான சருமத்தினால் வரும். அவசரமாக தலைக்கு குளிப்பது, நன்றாக தலையை துவட்டாமல் இருப்பதால் பொடுகு உற்பத்தியாகும்.எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்.அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினாலும் பொடுகு வரலாம். மனஅழுத்தம் மற்றும் கவலையாலும் பொடுகு வரலாம்.

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?தேங்காய் பால் – 1/2 கப், எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.அருகம்புல்லில் சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும். சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் நல்லது.

வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுடன் கண்டிஷனராகவும் இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறுங்கள்.