கர்ப்பப்பை கட்டிகளால் அவஸ்த்தை படும் பெண்களுக்கு இலகுவான இயற்கை தீர்வு..!

இன்றைய மருத்துவ குறிப்புகள் பகுதியில் பெண்களுக்கான மிக முக்கியமான மருத்துவ குறிப்பு ஒன்றினை தான் பார்க்கப் போகின்றோம். பெண்மை என்பது முழுமையடைவது தாய்மையடையும் போது தான். தாய்மையை தடை செய்யும் சில நோய்கள் பூப்பெய்த நாட்களில் இருந்தே ஆரம்பமாகி விடுகிறது. இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் போது தான் பிற்காலத்தில் குழந்தை பேறு நிரந்தர தடையாகி விடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் கர்ப்பப் பை கட்டிகள். சிலர் கர்ப்பப் பை நீர் கட்டிகள் திருமணமான பெண்களுக்கு மட்டும் வருவதாக கூறுவது முற்றிலும் தவறான விடயமாகும்.

12 வயதிற்கு பின் பருவமடையும் பெண்களுக்கு முதல் 6 மாதங்கள் கடந்த பின் முறையற்ற மாதவிடாய்.. அதாவது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் வருவது அல்லது மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவது தொடர்ந்தால் உடனடியாக வைத்தியரை நாடி பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

எதனையும் அலட்சியம் செய்ய வேண்டாம். நாம் சாதாரண கர்ப்ப பை நீர் கட்டிகள் என்று நினைக்கும் கட்டிகள் தான் கருப்பையை நீக்கும் அளவிற்கு செல்கின்றது என்னதை கருத்தில் கொள்ளுங்கள் !இப்போது நாம் கருப்பை நீர் கட்டிகளுக்கான தீர்வை பார்க்கலாம். இந்த நீர் கட்டிகள் தானாக கரைந்துவிட இதனை செய்யுங்கள்.

“கழற்ச்சிக்காய்”இது மருந்து கடைகளில் தூளாக விற்கப்படுகின்றது. கழற்ச்சிக்காய் பொடி என்ற பெயரில் பாக்கட்களில் இருக்கிறது. இதனை வாங்கிக் கொள்ளுங்கள். மாதுளை பழம் இது எங்கும் எடுக்கலாம் இதன் தோள்களை நன்றாக காயவைத்து தூளாக்கி கொள்ளுங்கள் அல்லது கடையில் மாதுளம் தோள் பொடி வாங்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து கிராம்பு, மற்றும் நீர். இவற்றை கொண்டு எப்படி கருப்பை கட்டிகளை நீக்கலாம் என பார்ப்போம். முதலில் அடுப்பில் சட்டி வத்து ஒரு கப் நீர் ஊற்றி கொதிக்க விடுங்கள் அதில் கராம்பு 5 போட்டு கொதிக்கும் போது அரை கரண்டி கழற்ச்சி பொடி.

அரை கரண்டி மாதுளை பொடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும் நன்றாக கொதித்ததும் இறக்கி வடித்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை குடியுங்கள். காலை அல்லது மாலை உங்களுக்கு இலகுவான நேரத்தில் குடியுங்கள்.!