கொய்யா காலையில் தொடர்ச்சியாக 3 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால்..!மருத்துவம் செய்யவேண்டிய தேவையே இல்லை..!!

ஏழைகளின் அப்பிள் கொய்யா என கூறுமளவிற்கு ஒரு பழுத்த கொய்யாவில் நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை காணப்படுகின்றதுடன், கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள் என்பதும் எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.


ஒரு கொய்யாவில் நார்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம், தாமிரம், மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்கள் காணப்படுகின்றதுடன், ஒரு ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி அளவினை விட நான்கு மடங்கு அதிகமான வைட்டமின் சி இனையும் கொண்ட கொய்யா இலைகள் வெப்ப மண்டல நாடுகளில் பாரம்பரிய மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கொய்யா இலையின் நன்மைகள்:புற்றுநோய்:கொய்யாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள் உடலில் ஏற்படக் கூடிய கட்டி வளர்ச்சிகளை தடுப்பதுடன், பெருங்குடல், மார்பகம், வாய், சருமம், வயிறு, வாய் குழி மற்றும் நுரையீரல் ஆகியனவற்றில் ஏற்படக் கூடிய புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கின்றது. மேலும், கொய்யா ஒரு கொழுப்பு அற்ற உணவாக காணப்படுவதனால் பெருங்குடலை நச்சு தன்மையிலிருந்து பாதுகாக்கின்றது.

நீரிழிவு:ஜப்பானில் உள்ள யாகுல்ட் மத்திய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொய்யா இலை பற்றிய ஆய்வில் கொய்யா இலை தேனீர் ஆல்பா – படரஉழளனைநயளந நொதி செயல்பாட்டை குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றது அதாவது கொய்யா இலை தேனீர் குடித்த 12 வாரங்களில் இன்சுலின் உற்பத்தியை குறைத்து இரத்த சர்க்கரை அளவையும் உடல் எடையையும் குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.சமிபாடு:கொய்யா இலை தேனீர் அல்லது கொய்யா சாற்றை பருகி வரும் போது செரிமான நொதி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உணவு நச்சை குறைக்கப்படுகின்றது.

முடியை உறுதிபடுத்த:முடி உதிர்வினால் கவலையடைவோர் கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வரும் போது முடி உதிர்வது நின்று முடி மேலும் வலுப்பெறும்.இரத்த குளுக்கோஸ் அளவை குறைத்தல்:நீரிழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் கொய்யா இலை தேனீரைப் பருகுவதன் மூலம் இன்சுலின் உற்பத்தியை குறைத்து இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க முடியும்.

முகப்பரு சிகிச்சை:கொய்யா இலையிலுள்ள வைட்டமின் சி எமது முகத்தில் முகப்பரு உருவாகுவதனைத் தடுக்கின்றது.தோல் பிரச்சினை:தோலில் உள்ள சுருக்கங்களால் அவதிப்படுவோரே, கொய்யாவில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை சரிசெய்கிறதுடன், தோல் அமைப்புமுறையையும் மேம்படுத்துகிறது.பல்வலி:கொய்யாவில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுதனால் பற்களின் ஈறுகளில் ஏற்படக் கூடிய இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவற்றின் சிகிச்சையில் இது சிற்பாபான பங்காற்றுகின்றது.