அரை மணி நேரத்தில் கால் ஆணி வலியே இல்லாமல் வெளிய வந்திடும்..!

கால் பாதத்தில் வெள்ளை நிறத்தில் சிறிய மேடு போன்ற பகுதியுடன் ஏற்படும் கால் ஆணி நோய் ஏற்பட்டால் நடக்கும் போதும், நிற்கும் போதும் வலி ஏற்படும். இதனை எளிய முறையில் குணப்படுத்துவது பற்றி, மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, கால் ஆணி என்பது பாதத்தில் ஆணி போன்ற ஒரு வளர்ச்சி இருக்கும்.

அதன் வெளிப்பகுதி கடினமாக இருக்கும். உள்முனை சதையின் உள் பதிந்து வளர்கிறது. நிற்கும் போது, மற்றும் நடக்கும் போது இந்த பகுதியில் அழுத்தம் கிடைப்பதால் வலி ஏற்படும். சிலருக்கு பாதத்தில் பக்கவாட்டிலும் ஏற்படலாம்.இருபாலருக்கும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான்.

வகைகள்:கடினமான கால் ஆணி:சிறிய தட்டையான கடினமான தோல் போன்ற அமைப்பு வெளியில் தென்படும். ஆனால் உள்ளே ஆணி போன்று வளர்ந்து இருக்கும்.மிருதுவான கால் ஆணி:வெளியில் வெண்மையாக மிருதுவான தோல் இருக்கும். சில நேரம் சிவந்து காணப்படும். விரல்களுக்கு அடியில் காணப்படும்.விதை ஆணி (seed corn):வித்துகள் போன்று 5 க்கும் மேல் ஒரே இடத்தில் அதிக அழுத்தம் கிடைக்கும் இடத்தில் இருந்து வலியை உருவாக்கும் வகையினை சீட் கார்ன் என அழைக்கின்றனர்.அறிகுறிகள்:கால் ஆணியின் வலி ஆள் ஆளுக்கு வேறுபடும். சிவந்த நிறத்தில் தோல் கடினமாய் இருக்கும். சில நேரங்களில் சீழ் அல்லது நீர் போன்ற திரவத்தை வெளிவிடும். சர்க்கரை நோய் உடையவர்களுக்கு கால் ஆணி இடத்தில் புண் ஏற்படும்.

காரணங்கள்:முறையற்ற விதத்தில் நடப்பதாலும், சரியான அளவில் இல்லாத, ஒத்துக் கொள்ளாத காலணி அணிவதாலும், குதிகால் உயர்ந்த காலணிகள் அணிவதாலும், அதிக நேரம் நிற்பதாலும், கரடு முரடான பாதையில் நடப்பதாலும் ஏற்படலாம். பிறவியிலேயே பாதத்தில் குறைபாடுகள் இருக்கும் போது காலுறை இன்றி காலணிகளை போடும் போது அழுத்தம் ஏற்படும். அதிக நேரம் தண்ணீரில் பாதங்கள் நனையும் போதும், காலணி அணிந்திருக்கும் போது வியர்வை அதிகம் இருந்தாலும் நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டு சலம் ஏற்படும்.

அதற்காக அரை மணி நேரத்தில் கால் ஆணி வலியே இல்லாமல் வெளிய கொடு வர இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத புதிய மருத்துவ முறை பற்றி கேளே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.