பல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக, ஈறுகளில் வீக்கம், இரத்தக்கசிவு, பல் ஆடுதல் சரியாக இது மட்டுமே போதுமாம்.!!

சொத்தைப்பல் வருவதற்க்கான காரணம் இனிப்பு அதிகமாக சாப்பிடுவதால்தான். குழந்தைகளுக்கு சொத்தைபல் அதிகமாக காணப்படும். ஏனெனில் குழந்தைகள் இனிப்பு சாப்பிட்டுவிட்டு வாயை கழுவாமல் இருப்பார்கள். இதனால் கிருமிகள் உருவாகி சொத்தைப்பல் வருவதற்க்கான வாய்ப்புகள் இருக்கும். இதற்கு சுடுதண்ணி வைத்து வாயை கொப்புளிக்கவேண்டும். அப்படி செய்தாலே கிருமிகள் அண்டாது.

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய குப்பைமேனி இலையை வைத்து பல்லில் உள்ள சொத்தை, கூச்சம், போன்றவற்றை சரி செய்யலாம். அதற்கு நான்கு குப்பைமேனி இலையை எடுத்து அதை நன்கு கழுவி அதில் ஒரு கிராம்பு, சிறிது உப்பு சேர்த்து மடக்கி சொத்தை பல்லின் மேல் வைத்து இருக்க பல்லால் மூடிக்கொள்ளவேண்டும். பிறகு ஒரு நிமிடத்திற்கி ஒருமுறை அதில் வரும் உமிழ்நீரை வெளியேற்றவேண்டும். இதில் கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

மேலும் சொத்தை பல் வருவதை தடுத்து பல்கூச்சத்தையும் சரிசெய்யும். இதனை பல்துலக்கிய பிறகு செய்யவும். மேலும் வாய்துர்நாற்றம் உள்ளவர்கள் நல்லஎண்ணை வைத்து குப்பிலுத்து வந்தால் துர்நாற்றம் நீங்கி சொத்தைப்பல் வருவதையும் தடுக்கும்.

ஆயுர்வேதத்தில் பல்சொத்தையினால் ஏற்படும் பல்வலியைப் போக்க சுலபமான ஒரு வழி இருக்கிறது. இதற்கு முதலில் குப்பைமேனி இலையை 5, அல்லது 6 எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனோடு ஒரு கிராம்பையும் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தினசரி நீங்கள் பல்துலக்கும் முன்பு சொத்தை பல்லின் ஓட்டையில் வைத்தால் போதும். ஒரு மணி நேரத்துக்கு பின்பு பல் தேய்க்க வேண்டும்.

இப்படிச் செய்வதால் கிருமிகள், பாக்டீரீயாக்களை நாம் பல் துலக்கும்போது வெளியேற்றிவிடும். இதை கொஞ்சநாள்கள் பாளோ செய்தாலே சொத்தைப்பல் பிரச்னையை போக்கிவிடலாம்.சரி வாருங்கள் இவற்றை வித்தியாசமான முறையில் பல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக, ஈறுகளில் வீக்கம், இரத்தக்கசிவு,பல் ஆடுதல் சரியாக இந்த முறையை பின்பற்றுங்கள்