என்றும் 16 வயது போல தோற்றத்திற்கு உற்ற துணையாகும் கற்றாழை..!!

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐஸ் க்யூப் ட்ரேயில் கிரீன் டீயை ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து, அந்த கிரீன் டீயால் ஆன ஐஸ் கட்டிகளை எடுத்து, கண்களில் ஒற்றியெடுக்கலாம். வீக்கமும் பறந்துவிடும்; கண்களும் அழகாகப் பிரகாசிக்கும்.ஐஸ் க்யூப் ட்ரேயில் காய்ச்சாத பாலை ஊற்றி, ஃபிரீஸரில் வைத்துவிட வேண்டும். மாலை வீட்டுக்கு வந்ததும், முகத்தைக் கழுவிய பின்னர், இந்த ஐஸ் கட்டியால் முகத்தை லேசாக ஸ்க்ரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி ஃபேஷியல் செய்ததுபோல முகம் பிரகாசிக்கும்.

முகத்திலோ, சருமத்திலோ ஏற்படும் சுருக்கங்களைப் பற்றிக் கவலைப்படாத பெண்களே இருக்க முடியாது. சுருக்கங்களை அகற்றுவதற்கும், அவை வராமல் தடுப்பதற்கும் பல விலை உயர்ந்த க்ரீம்களை எத்தனையோ பேர் உபயோகிக்கிறார்கள் ஆனால், செலவே இல்லாமல் இவற்றைக் குறைப்பதற்கு ஒரே வழி ஐஸ் கட்டிகள்தான். தினமும் ஐஸ் கட்டிகளால் முகத்துக்கு ஒத்தடம் தந்தால், தோல் இறுக்கமடையும். இது, சுருக்கங்கள் உருவாவதைத் தடுக்கும்.

முகத்தில் அரிப்பு ஏற்பட்டால், அலர்ஜி உண்டானால் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்துப் பாருங்கள். மேலும் அரிப்பு ஏற்படாமல் இருக்கும்; அலர்ஜி பரவாமல் தடுக்கும்.வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் கற்றாழைச் சதைப் பகுதி மற்றும் ஐஸ் கட்டியால் உடல் முழுவதும் தடவலாம். உடல் கருமை நீங்கி உடல் குளுமையாகும். கற்றாழைக்குப் பதிலாக வெள்ளரிச் சாற்றையும் தடவலாம்.

முகத்தின் தோலில் துவாரங்கள் இருந்தால் அவை குறைவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, பியூட்டி பார்லரில் மேக்கப் போடுவதற்கு முன்னர் ப்ரைமர் போடுவார்கள். சிலர் ப்ரைமரின் விலை அதிகம் என்பதால், அதை வாங்கிப் பயன்படுத்த மாட்டார்கள். ப்ரைமருக்கு பதிலாக ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். இது, தற்காலிகமாக, துளைகளைக் குறைக்கும்.சிறிது கற்றாழை ஜெல்லுடன் சிறிது எலுமிச்சை ஜூஸ் கலந்து முகம் மற்றும் கழுத்தில தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.கற்றாழை ஜெல்லுடன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையாகத் தோன்றும்.

கற்றாழையின் ஓரங்களில் உள்ள கூர்மையான முள்ளை வெட்டிவிட்டு, நீரில் போட்டு நன்கு வேகவைக்க வேண்டும். அதை எடுத்து சிறிது தேன் சேர்த்து அப்ளை செய்யவும். மிகச்சிறந்த மாற்றத்தைக் காண்பீர்கள்.சென்சிடிவ் சருமமாக இருந்தால் கற்றாழையுடன் தயிர், வெள்ளரிச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.வறட்சியான சருமமாக இருந்தால் கற்றாழையுடன் வெள்ளிரிக்காய், பேரிச்சம்பழம், லெமன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்த வேண்டும்.கற்றாழையுடன் மாம்பழ கூழ் சேர்த்து அப்ளை செய்து வந்தால் முகம் ஜொலிக்கும்.

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட:சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர:சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்:கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.