இலங்கை மத்திய வங்கி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய கடும் எச்சரிக்கை..!!

மத்திய வங்கியின் உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மத்திய வங்கியின் கொள்கைகளுக்கு அமைய செயற்படத் தவறும் அதிகாரிகள் உத்தியோகத்தர்களை பணி நீக்குவதற்கும் தயங்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் நியமங்களை பின்பற்றத் தவறும் மத்திய மற்றும் அரச வங்கி அதிகாரிகள், உத்தியோகத்தர்களை பணி நீக்கிவிட்டு கடமைகளை செய்யக் கூடியவர்களை பணிக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்றுமதியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுமக்களுக்கும், முயற்சியான்மையாளர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணங்கள் கடைநிலை வரை சென்று சேரவில்லை என்பது தெளிவாக புரிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் குறித்து உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் மரபு ரீதியான வழிமுறைகளிலிருந்து விலகி தீர்மானங்களை எடுப்பதற்கு தயங்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, ஏற்றுமதி துறைக்கு அரசாங்கம் பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.