உலக வாழ் மக்களுக்கு பெருமகிழ்ச்சியான செய்தி.!! கொடிய கொரோனாவை எதிர்த்துப் போராட மருந்தைக் கண்டுபிடித்தது ரஷ்யா.!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கிகரிக்கப்பட்ட முதலாவது மருந்து ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தை கொள்வனவு செய்வதற்கு 10 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகளாவிய ரீதியில் 75 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 4 இலட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்த வைரஸை கட்டுப்படுத்தல் அல்லது தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரசித்திபெற்ற விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. அவிபாவிர் (Avifavir) என்ற இந்த மருந்தை அந்நாட்டி பல வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என ரஷ்ய அரசு பரிந்துரைத்தது.ரஷ்ய அரசின் 50 சதவிகித முதலீடு உள்ள கெம்ரர் (ChemRar) என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்துள்ளதுடன் ரஷ்ய சுகாதார அமைச்சகம் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.மாதாந்தம் 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து இரண்டாயிரத்தை தாண்டியுள்ளதுடன் 6 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.எவ்வாறெனினும், அங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.இதுவரை ரஸ்யாவில் 2 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா பிரித்தானியாவை பின்தள்ளி 4 ஆவது இடத்திற்கு முன்னெறியுள்ளது.இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை நொறுங்கியுள்ளதுடன் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 93 ஆயிரமாக பதிவாகியுள்ளதுடன் 41 ஆயிரத்து 364 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவொருபுறமிருக்க, அங்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 278 பேர் மாத்திரமே என ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.