கொரோனா அச்சுறுத்தல்…இந்தியக் கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு.!! இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாட இருந்தது.ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் நடைபெறுவது சாத்தியமல்ல என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்ததை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபை இத்தொடரை ஒத்திவைத்தது.இருப்பினும், சுற்றுப்பயணம் முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை என்றும் இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இத்தொடர் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யலாம் என நம்பப்படுகின்றது.