தங்க நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி..!! யாழில் இன்று திடீரென உச்சத்திற்குச் சென்ற தங்கத்தின் விலை.!!

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 950 ரூபாய் உயர்வடைந்து 84 ஆயிரத்து 350 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை வரலாற்றின் ஆபரணத்தங்கத்தின் அதிஉச்ச விலை ஏற்றம் இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூன் 12) வெள்ளிக்கிழமை 22 கரட்ஆபரணத் தங்கத்தின் விலை 84 ஆயிரத்து 350 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.நேற்று இதன் விலை 83 ஆயிரத்து 400 ரூபாவாக இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை பவுணுக்கு 950 ரூபாய் உயர்ந்துள்ளது.தூய தங்கத்தின் விலை ஆபரணத் தங்கத்தைப் போலவே 24 கரட் தூய தங்கத்தின் விலை நேற்று 91 ஆயிரம் ரூபாயிலிருந்து இன்று 92 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.