என் அன்புக் குழந்தையே…இது உங்கள் ஷீர்டி சாயி பாபா..!

என் அன்புக் குழந்தையே… உங்கள் ஷீர்டி சாயி பாபா..! உன்னை நினைக்கையில் என் கண் கலங்குகிறது. எனக்கு என் சாய்அப்பா தான் எல்லாம்.. நீ நினைக்கும் போது பூரிப்பு அடைகிறேன் .நீ கவலை கொள்ளாதே. உன் மனதில் வலியை ஏற்படுத்தியவர்கள் ஒரு நாள் அதை உணர்வார்கள். அதையெல்லாம் நினைத்து நீ வருந்தாதே. உன் சாய்அப்பா உனக்கு துணையாக இருப்பேன்.வாழ்க்கை என்பது எல்லாம் கலந்தது தான் போலிக்கும் நிஜத்துக்கும் வித்தியாசங்களை நீ உணர வேண்டும். எல்லாரையும் நம்பு. ஆனால், நீ நம்புகிற அளவுக்கு அவர்கள் உண்மையாக இருக்கிறார்களா என்று யோசித்து கொள்.உன் அப்பா உனக்கான எல்லாம் சூழ்நிலைகளில் உனக்கு உதவி செய்வேன்.ஆதலால், நீ எதற்கும் கலங்காதே. உன் சாய் அப்பா எப்போதும் உனக்காக தான் இருக்கிறேன்… இருப்பேன்…..

இது சாயியின் குரல்..! உங்கள் ஷீர்டி சாயி பாபா..!