எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸை எதிர்த்துப் போராடும் ஆயுர்வேத மருத்துவம்..!!

உலகையே ஆட்டிப்படைத்த கொண்டிருக்கும் கொரோன வைரஸ்க்கு எந்தவொரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படதா நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் சர்வதேச அளவில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் கொரோனா வைரசுக்கு எதிராக போரிடுவதில் நோய் எதிர்ப்புசக்தியை பெருக்கிக்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைத்து உள்ளனர்.இதற்கு ஆயுர்வேதத்தில் சில மூலிகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸிற்கு எதிராக செயற்படுகின்றது என்று கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து , நுண்ணுயிரி தொற்றுகளை அழிக்கும் ஆயுர்வேத மருத்துவம் சிலவற்றை இங்கு பார்ப்போம்.துளசி, லவங்கப்பட்டை, கருப்பு மிளகு, சுக்கு, உலர் திராட்சை ஆகியவற்றை சாப்பிடுவதும், வழக்கமான யோகா பயிற்சி செய்வதும் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.

சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 30 நிமிடம் யோகாசனம் செய்ய வேண்டும், மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், தியானம் செய்ய வேண்டும்.
மஞ்சள், சீரகம், கொத்தமல்லி மற்றும் பூண்டு ஆகியவற்றை சமையலில் பயன்படுத்துவது கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படுவதில் உதவியாக இருக்கக்கூடும் எனவும் கூறியது. அத்துடன் காலையில் 10 கிராம் ஸ்யாவன் பிராஷ் (நெல்லிக்காய் லேகியம்) எடுத்துக்கொள்ளவது சிறந்தது.வெல்லமும், எலுமிச்சை சாறும் சேர்த்து பருகுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக வேலை செய்யும்.150 மில்லி சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை கலந்து தினமும் ஒன்றல்லது இரண்டு முறை பருகுவதும், காலை- மாலை என இருவேளை மூக்கின் இரு துவாரத்திலும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சில சொட்டுகளை ஊற்றுவதும் உங்களை கவசமாக பாதுகாக்கும்.